/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்தல்; ஆர்வமுடன் பங்கேற்ற 276 மாணவியர்
/
சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்தல்; ஆர்வமுடன் பங்கேற்ற 276 மாணவியர்
சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்தல்; ஆர்வமுடன் பங்கேற்ற 276 மாணவியர்
சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்தல்; ஆர்வமுடன் பங்கேற்ற 276 மாணவியர்
ADDED : பிப் 24, 2025 12:50 AM

கோவை; சின்னவேடம்பட்டியில் பெண்களின் தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மூன்று வகையான போட்டிகளில், 276 மாணவியர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேசன் சார்பில் வாலிபால், சிலம்பம், கராத்தே போட்டிகள், சரவணம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்தது. வாலிபால் போட்டியில், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், டி.கே.எஸ்., அணி, 2-0 என்ற செட் கணக்கில் மகரிஷி வித்யாமந்திர் அணியையும், இரண்டாம் அரையிறுதியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் லிட்டில் பிளவர் அணியை வென்றது.
இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா மெட்ரிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் டி.கே.எஸ்., அணியை வெற்றி கொண்டது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், லிட்டில் பிளவர் அணி, 2-0 என்ற செட் கணக்கில் மகரிஷி வித்யாமந்திர் அணியை வென்றது.
தவிர, சிலம்பம் போட்டியில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு உள்ளிட்ட போட்டிகளிலும், கராத்தே போட்டியிலும், 30க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று அசத்தினர். மொத்த, 276 மாணவியர் பங்கேற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 175 பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தவிர, வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் கோப்பை வழங்கினார். ரோட்டரி கோவை கிழக்கு தலைவர் சித்தார்த், டி.கே.எஸ்., பள்ளி முதல்வர் சுஜாதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

