/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் பாலியல் தொல்லை: சில்மிஷ கிளீனர் கைது
/
பஸ்சில் பாலியல் தொல்லை: சில்மிஷ கிளீனர் கைது
ADDED : மே 31, 2024 02:19 AM
கோவை;பஸ்சில் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, 26 வயது பெண், கோவையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரிலிருந்து தனியார் டிராவல்ஸ் பஸ்சில், கோவைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தார்.
அப்போது, அதே டிராவல்ஸ் பஸ் கிளீனர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் மற்றும் அவரது சகோதரர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த பஸ் கிளீனரை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிளீனர் அவர்களை மிரட்டிவிட்டு, தப்பிச் சென்றார்.
புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து பஸ் கிளீனர் தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்த சந்திரபோஸ், 41, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.