/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லுார் ராஜலட்சுமி மில்ஸ் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு
/
சிங்காநல்லுார் ராஜலட்சுமி மில்ஸ் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு
சிங்காநல்லுார் ராஜலட்சுமி மில்ஸ் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு
சிங்காநல்லுார் ராஜலட்சுமி மில்ஸ் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : செப் 02, 2024 01:24 AM

கோவை;சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு படித்த மாணவர்களின் சங்கமம், கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள, 'ஜோன் கனெக்ட்' ஹோட்டலில் நேற்று நடந்தது.
கற்பித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கோவையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த பாலகிருஷ்ணன் கூறுகையில், 35 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் நாங்கள் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
இது இரண்டாவது சந்திப்பு. அடுத்த முறை குடும்பத்தினருடன் சந்திக்க முயற்சி மேற்கொள்வோம். எல்லோரும் சேர்ந்து பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் உதவ திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
வந்திருந்த முன்னாள் மாணவர்கள் எல்லோரும், வேட்டி கட்டி வந்திருந்தனர். பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.