/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை காந்தையாற்றில் வெள்ளம் படகு பயணத்துக்கு வெள்ளோட்டம்
/
சிறுமுகை காந்தையாற்றில் வெள்ளம் படகு பயணத்துக்கு வெள்ளோட்டம்
சிறுமுகை காந்தையாற்றில் வெள்ளம் படகு பயணத்துக்கு வெள்ளோட்டம்
சிறுமுகை காந்தையாற்றில் வெள்ளம் படகு பயணத்துக்கு வெள்ளோட்டம்
ADDED : ஆக 03, 2024 05:35 AM

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாறு ஓடுகிறது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பவானிசாகர் அணையில், 93 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், காந்தையாற்றில், 30 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தலைவர் மாலதி உதயகுமார் ஆகியோர் கூறுகையில், ''காந்தையாற்றில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வந்து செல்லும் வழியும் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்வதற்காக, ஆழியார் அணையிலிருந்து மோட்டார் படகை வழங்க வேண்டும் என, பேரூராட்சி சார்பில், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கலெக்டர் அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று (நேற்று) காலை ஆழியார் அணையிலிருந்து மோட்டார் படகு லாரியில் லிங்காபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. படகு வெள்ளோட்டம் முடித்து பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாத பயணம் விரைவில் துவக்கப்படும்,'' என்றனர்.