sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

40 அடியை எட்டியது சிறுவாணி அணை

/

40 அடியை எட்டியது சிறுவாணி அணை

40 அடியை எட்டியது சிறுவாணி அணை

40 அடியை எட்டியது சிறுவாணி அணை


ADDED : ஜூலை 19, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தொடர் கனமழை எதிரொலியாக நேற்றும் கோவை நகர், புறநகர் பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது. கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணியிலும் மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 47 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 87 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 40.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 7.715 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:

வேளாண் பல்கலை, 19.80, பெரிய நாயக்கன்பாளையம், 1, பில்லுார் அணை, 6, கோவை தெற்கு தாலுகா, 6.80, சூலுார், 5, வாரப்பட்டி, 2, மதுக்கரை தாலுகா, 4, போத்தனுார், 4 மி.மீ., பொள்ளாச்சி, 30, மாக்கினாம்பட்டி, 32, கிணத்துக்கடவு, 7.5, ஆனைமலை, 11, ஆழியார், 15.20, சின்கோனா, 97, சின்னக்கல்லார், 152, வால்பாறை பி.ஏ.பி., 109, வால்பாறை தாலுகா, 105, சோலையாறு, 99 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us