/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவானந்த அனுபவ பயிற்சி நாளை ஒருநாள் நடக்கிறது
/
சிவானந்த அனுபவ பயிற்சி நாளை ஒருநாள் நடக்கிறது
ADDED : ஆக 24, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ஒரு நாள் சிவானந்த அனுபவ பயிற்சி வகுப்பு நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில், ஒரு நாள் சிவானந்த அனுபவ பயிற்சி வகுப்பு நாளை (25ம் தேதி) காலை, 7:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கிறது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், நேரடி அருளாசி வழிகாட்டுதலோடு, சிவநாம ஜெபம், தியான சிகிச்சை, யோகப்பயிற்சிகள், ஆரோக்கிய ரகசியங்கள், சிவஞானம், சத்சங்கம், சிவ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வகுப்பில் பங்கேற்க அனுமதி இலவசமாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்; பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

