/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
ADDED : ஜூலை 22, 2024 11:54 PM
கோவை:சிங்காநல்லுார் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரிடம் இருந்து இரு சேவல்களையும், ரூ.7,000 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை சுடுகாடு அருகே, ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தையொட்டிய புளியமரத்தின் அடியில், சேவல் சண்டை நடத்தி, சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, சிங்காநல்லுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், உப்பிலி பாளையம் அருகே ஆர்.வி.எல்., காலனியை சேர்ந்த ராமச்சந்திரன்,45, தங்க வேலு,42, சுந்தராபுரம், நாகராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்,49, கள்ளிமடையை சேர்ந்த கருப்பசாமி,36, விக்னேஷ்வரன்,32, மனோஜ்குமார்,20, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு சண்டை சேவல்கள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.