ADDED : ஜூலை 23, 2026 12:12 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் வேளாண் இணை பேராசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.
பயிற்சியை துவக்கி வைத்து பேசிய பல்கலை துணைவேந்தர் சுப்ரமணியன்(பொ), ‘‘கல்விசார் மேன்மை என்பது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆராய்ச்சிகளை செய்வதில்தான் வெளிப்படுகிறது,’’ என்றார்.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சோமசுந்தரம், திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குனர் ஜெயக்குமார், உள்தர அங்கீகாரப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் உமேஷ் கண்ணா, பேராசிரியர் சாம்சாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
