/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : மார் 08, 2025 11:33 PM
கோவை: கோவை, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் (ஐ.எப்.ஜி.டி.பி.,) சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, கருத்தரங்கு நடந்தது.
'லைப்' இயக்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களுக்கு, 'தரமான மற்றும் ஆரோக்கியமான விதை, நாற்றுகளை உற்பத்தி செய்வது', 'கழிவில் இருந்து வளம்' என, இரு பிரிவுகளாக பயிற்சி வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு வழங்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை, ஐ.எப்.ஜி.டி.பி., வளாகத்தில் உள்ள, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில் நடந்த நிகழ்வில், முதுநிலை விஞ்ஞானி ரேகா வாரியர், ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் குஞ்ஞி கண்ணன், முதுநிலை திட்ட அலுவலர் விக்னேஷ்வரன் ஆகியோர், திறன் மேம்பாடு பயிற்சி வழங்கினர்.
பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரியின் 20 மாணவர்கள், அரசு கலைக் கல்லூரியின் 39 மாணவர்கள், நிர்மலா கல்லூரியின் 25 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.