/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
/
கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ADDED : செப் 03, 2024 01:48 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் கிராமப்புற பெண்களுக்கு நேற்று தொடங்கியது.
இந்த பயிற்சி முகாம் வரும் 6ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் வனக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ரேவதி, கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு இப்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் சுயதொழில் செய்து அதிக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் குறித்து, விளக்கினார்.
பட்டுப்புழுவியல் துறை தலைவர் சித்தேஸ்வரி சிறப்புரையாற்றி, இப்பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டு, தொழில் முனைவோர்களாக மாறி, குடும்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த பயிற்சியில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார், பொன்விழா நகர் மீனாட்சிபுரம், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சார்ந்த 25 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சிக்கான நிதி உதவி புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி
நிறுவனம் வழங்கியது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட ஆய்வாளர் பிரியதர்ஷினி, பேராசிரியர் தங்கமலர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். -