/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வரும் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வரும் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வரும் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வரும் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 09, 2024 10:37 PM
கோவை:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சி, தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து அளிக்கப்பட உள்ளது.
தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்; தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., படித்தவர்களாகவும், 18 முதல், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கொத்தனார், வெல்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை.
வரும், 16ல் பயிற்சி துவங்கும். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இப்பயிற்சி, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் நடைபெறும். நாளொன்றுக்கு, 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நல வாரிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை - திருச்சி ரோட்டில், ராமநாதபுரம் மகேந்திரா ஷோ ரூம் பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பத்தை நேரில் வழங்க வேண்டும்.
விபரங்களுக்கு, 0422 - 232 4988 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.