/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி நீர்மட்டம்; 28 அடியாக உயர்ந்தது
/
சிறுவாணி நீர்மட்டம்; 28 அடியாக உயர்ந்தது
ADDED : ஜூலை 08, 2024 11:00 PM
கோவை:சிறுவாணி அணை பகுதியில், 55 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; 28 அடியாக நீர் மட்டம் (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்திருக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுவதால், நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்துவருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 55 மி.மீ., அடிவாரத்தில், 12 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.
மாநகராட்சி மற்றும் வழியோர கிராமப் பகுதி மக்களின் தேவைக்காக, 5.78 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. நீர் மட்டம், 28 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்திருக்கிறது.
இதேபோல், தொண்டாமுத்துார் - 16, சின்கோனா - 20, சின்னக்கல்லார் - 46, வால்பாறை - 47, சோலையாறு - 16 மி.மீ., பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் சாரல் மற்றும் துாறல் மழையே பதிவாகியிருக்கிறது.
வரும், 5 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில், 14 முதல், 25ம் தேதி வரை கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.