ADDED : ஆக 29, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: இருகூரில் மேம்பாலத்தின் கீழிருந்து கரும்புகை எழுந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சூலுார் அடுத்து இருகூர் பேரூராட்சி உள்ளது. இங்கு ரயில் ரோட்டை கடக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் நொய்யல் ஆறும் செல்கிறது. இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பையில் நேற்று காலை தீ பிடித்தது. தீயால் கரும்புகை மேலே எழும்பி மேம்பாலத்தின் மேல் காற்றோடு காற்றாக கலந்தது. இதனால், மேம்பாலத்தின் மீது சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ரோடு முழுக்க கரும்புகை படர்ந்ததால், வாகன ஓட்டிகள் திணறினர். இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

