/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டம் தக்க வைக்க சுளீர் பேச்சு
/
கூட்டம் தக்க வைக்க சுளீர் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நாம் தமிழர்' கட்சி பொதுக்கூட்டங்களுக்காக, தொகுதி அளவில் தனிக்குழு ஏற்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் சீமான் வர தாமதமானாலும், 'சுளீர்' பேச்சை நிர்வாகிகள் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
திருப்பூரில் சீமான் வர தாமதமானது. கூட்டம் திரண்ட நிலையில், நான்கு பேச்சாளர்கள், சீமான் மேடைக்கு வரும் வரை பேசி, சீமான் பாணியிலேயே பேசி கூட்டத்தை தக்க வைத்தனர். 'பேச்சின் வலிமை' தான் பல நேரங்களில், கட்சியையும், வேட்பாளரையும் புரட்டிப் போடுகிறது. பேச்சாற்றல் மிக்கவர்களை, 'நாம் தமிழர்' கட்சி உருவாக்கி வைத்துள்ளது.

