/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயான பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
/
மயான பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ADDED : பிப் 21, 2025 11:20 PM
சூலுார்; செஞ்சேரி மயான பிரச்னைக்கு தீர்வு காண, அமைதி கூட்டம் சுல்தான்பேட்டையில் நடந்தது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது செஞ்சேரி கிராமம். இங்குள்ள மயானத்தை ஒரு தரப்பு மக்கள் பயன்படுத்த, மற்ற தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மயான பிரச்சனைக்கு தீர்வு காண, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில், இப்பிரச்சனைக்கு தீர்வு காண, சூலுார் தாசில்தார் சரண்யா தலைமையில் அமைதி கூட்டம் நடந்தது.
அனைத்து கட்சியினர், இரு தரப்பு மக்கள், வருவாய், ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
அனைத்து தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டன. தற்போது இருக்கும் மயானத்தில், அனைத்து தரப்பினரின் ஒப்புதலோடு, மற்றொரு தரப்பினருக்கு தனியாக இடம் கொடுப்பது என, தீர்மானிக்கப்பட்டது.