/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகன் என்றால் ராமன் போல் இருக்க வேண்டும்'
/
'மகன் என்றால் ராமன் போல் இருக்க வேண்டும்'
ADDED : ஆக 04, 2024 11:13 PM

கோவை: ஆடி உற்சவத்தை முன்னிட்டு, ராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் வால்மீகி ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஆங்கரை ரங்கசாமி தீட்சிதர் பேசியதாவது:
ராமாயணத்தில் கதாபாத்திரங்களை மிகவும் செம்மையாக, அர்த்தங்களோடு வால்மீகி உருவாகியிருக்கிறார். ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்றால், தசரதனை போல் இருக்க வேண்டும் என்கிறார். அதே போல், மகன் என்றால் ராமன் போல் இருக்க வேண்டும். கணவன் - மனைவி என்றால் ராமன் - சீதை போல் இருக்க வேண்டும் என்கிறார் வால்மீகி. சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டாக பரதனையும், லட்சுமணனையும் கூறுகிறார். நண்பன் என்றால் சுக்ரீவன் போலவும், தோழன் எனறால் குகன் போலவும் இருக்க வேண்டும் என்கிறார்.
ஒரு பகைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, ராவணனை படைத்து இருக்கிறார். இப்படி, அற்புதமான தெய்வீக குணங்களை கொண்ட பாத்திரங்களை, ராமாயணத்தில் படைத்து, நம் ஆன்மிக வாழ்க்கைக்கு வால்மீகி வழிகாட்டி இருக்கிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.