/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைத்துறையில் வாங்கலாம் சூப் பொடிகள்
/
தோட்டக்கலைத்துறையில் வாங்கலாம் சூப் பொடிகள்
ADDED : ஜூலை 23, 2024 09:05 PM
கோவை:இயற்கையான முறையில் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட சூப் பொடிகள், தோட்டக்கலைத்துறை விற்பனையகத்தில், விற்பனை செய்யப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை ஏற்பாட்டில், பழங்குடியின மக்களால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட முருங்கை இலை, கீழா நெல்லி, பிரண்டை, வெந்தைய கீரை, ஆவாரம் பூ, அகத்திக்கீரை, வாழை தண்டு, ஆடாதொடா, மணத்தக்காளி, முடவாட்டுக்கால் கிழங்கு, கரிசலாங்கண்ணி, வல்லாரை, முடக்கத்தான் சூப் பொடிகள் தடாகம் ரோட்டில் உள்ள, தோட்டக்கலை விற்பனையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
பொது மக்கள் கலப்படமில்லாத இவ்வகை சூப் பொடிகளை பெற்று, பயன்படுத்திக்கொள்ளலாம் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்தார்.

