/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு குறுமைய டெனிகாய்ட்; எக்விடாஸ் பள்ளியில் துவக்கம்
/
தெற்கு குறுமைய டெனிகாய்ட்; எக்விடாஸ் பள்ளியில் துவக்கம்
தெற்கு குறுமைய டெனிகாய்ட்; எக்விடாஸ் பள்ளியில் துவக்கம்
தெற்கு குறுமைய டெனிகாய்ட்; எக்விடாஸ் பள்ளியில் துவக்கம்
ADDED : ஆக 01, 2024 01:42 AM

கோவை: தெற்கு குறுமைய அளவிலான டெனிகாய்ட் போட்டி, மதுக்கரை சாலையில் உள்ள எக்விடாஸ் குருகுல் பள்ளியில் நேற்று துவங்கியது.
பள்ளி மாணவர்களுக்கு தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி, குனியத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது.
இதில் மாணவர்கள் பிரிவு டெனிகாய்ட் போட்டி, நேற்று நடந்தது. மாணவியர் பிரிவு போட்டி இன்று நடக்கிறது.
போட்டியை, குனியமுத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், பி.டி.ஏ., தலைவர் சுரேஷ், எக்விடாஸ் பள்ளி முதல்வர் சாந்தி, மேலாளர் கதிரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாணவர்களுக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் சுற்றுப்போட்டி முடிவுகள்
19 வயது பிரிவில், ஆஸ்ரம் பள்ளி அணி 20 - 19 என்ற புள்ளிக்கணக்கில் கஸ்துாரி மெட்ரிக்., பள்ளியையும்; 19 வயது பிரிவில் நாடார் பள்ளி அணி 21 - 11 என்ற புள்ளிக்கணக்கில் நைஸ் அகாடமி பள்ளியையும், எக்விடாஸ் குருகுல் பள்ளி அணி 21 - 8 என்ற புள்ளிக்கணக்கில் டி.வி.சேகரன் பள்ளி அணியையும் வீழ்த்தின.