/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைப்பு
/
கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைப்பு
கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைப்பு
கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைப்பு
ADDED : மே 27, 2024 11:16 PM
அன்னூர்;அன்னூரில் மக்கள் நல சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை செயல்படுகிறது. இவர்கள் ஓர் ஆண்டுக்குள், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து, குளம், குட்டைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், ஒரு லட்சம் விதை பந்துகள் தூவ இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
இதன் துவக்க நிகழ்ச்சியாக கெம்பநாயக்கன்பாளையம் குளத்திலும், குன்னத்தூர் குட்டையிலும், 2000 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வாரம் காரேக்கவுண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் குளத்தில், இந்த அறக்கட்டளை நிர்வாகிகள், ஆயிரம் விதைப்பந்துகளை விதைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் தலைமை வகித்தார்.