/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனம் விட்டு பேசுங்க; மனக்குழப்பம் தீரும்! மனநல டாக்டர் 'அட்வைஸ்'
/
மனம் விட்டு பேசுங்க; மனக்குழப்பம் தீரும்! மனநல டாக்டர் 'அட்வைஸ்'
மனம் விட்டு பேசுங்க; மனக்குழப்பம் தீரும்! மனநல டாக்டர் 'அட்வைஸ்'
மனம் விட்டு பேசுங்க; மனக்குழப்பம் தீரும்! மனநல டாக்டர் 'அட்வைஸ்'
ADDED : செப் 13, 2024 10:32 PM

பொள்ளாச்சி : ''40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை தவிர்க்க மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் குறையும்,'' என, மாவட்ட மனநல டாக்டர் ெஹலினா செல்வக்கொடி தெரிவித்தார்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநலப்பிரிவு சார்பில், சந்திராபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில்,தற்கொலை தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட மனநல டாக்டர் ஹெலினா செல்வக்கொடி கூறியதாவது: பொள்ளாச்சியில் கடந்த ஓர் ஆண்டில், 1,200 பேர், தற்கொலை எண்ணங்களுடன் சிகிச்சைக்காக வந்தனர். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 110 பேர் வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்தும், அவர்களது எண்ணங்களை மாற்றி உள்ளோம்.
குடி போதை, போதை வஸ்துக்கள், குடும்ப பிரச்னை, பிடிவாதம் போன்ற காரணங்களினால் தற்கொலை நடக்கிறது.ஒரு ஆண்டுக்கு இந்தியாவில், எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 40 வினாடிக்கு, ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெரும்பாலும், 15 - 29 வயதுடையவர்கள் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
வீட்டில் யாராவது தற்கொலை செய்திருந்தால், அவர்களது குழந்தைகள், தற்கொலை செய்து இறக்கலாம்; வீட்டு சூழல், நோய், மன நிம்மதியில்லாதது, வருமானம், கடன் தொல்லை போன்ற காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மனதில் வலிமை இல்லாததால் தற்கொலை அதிகளவு நடக்கிறது. மனதளவில் உள்ள கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு முக்கிய காரணமாகும். நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் பேசாமல் இருந்தால், அவர்களிடம் மனம் விட்டு பேசி அவர்களை பாதுகாக்க வேண்டும்.
மனம் விட்டு பேச வைத்து அவர்களது எண்ணங்களை முறியடிக்க வேண்டும். அவர்களை பேச வைத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்.
மாவட்ட மனநலத்திட்டத்தின் சார்பில், இரண்டு டாக்டர்கள் அடங்கிய குழுவினர், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை மனமாற்றம் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
வாரம் மூன்று நாட்கள் பொள்ளாச்சியில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பள்ளிகள், கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.