/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
/
சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
ADDED : ஏப் 16, 2024 11:09 PM
- நமது நிருபர் -
வாக்காளர்கள் சொந்த ஊர் சென்று ஓட்டளிக்க வசதியாக, இன்றும், நாளையும் (18ம் தேதி) சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. முதல் நாள் என்பதால், இன்று காலை மத்திய திருப்பூர் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு பஸ் இயக்கப்படுகிறது. இன்று இரவு புறப்பட்டு, நாளை காலை திருப்பூருக்கு சென்னையில் இருந்து பஸ் வந்து சேருகிறது.
வரும், 18ம் தேதி காலை மற்றும் மாலை, இரவு, நான்கு பஸ்கள் சென்னைக்கு சென்று திரும்ப உள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, இன்று இரவு, 18ம் தேதி நாள் முழுதும் திருப்பூர் கோவில்வழி, மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயங்க உள்ளது.
திருப்பூர் மண்டலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு, 90 சிறப்பு பஸ் இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

