/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உளுந்து பயிரில் மேலாண்மை விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு
/
உளுந்து பயிரில் மேலாண்மை விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு
உளுந்து பயிரில் மேலாண்மை விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு
உளுந்து பயிரில் மேலாண்மை விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:24 AM
மேட்டுப்பாளையம்;உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொடர்பாக பண்ணை பள்ளியில் விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
தமிழக அரசின் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் வாயிலாக பண்ணை பள்ளியில் உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொடர்பாக மோத்தேபாளையம் கிராமத்தில் வகுப்பு நடைபெற்றது.
இதில் நிலம் தயார் செய்தல் முதல் அறுவடை வரை, பின்சார் தொழில்நுட்பங்கள் போன்றவைகள் விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வகுப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமையில், வேளாண் துறை திட்டம், மானியங்கள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உளுந்து பயிரின் முக்கியத்துவம் குறித்து, கோவை வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடாசலம் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில், வேளாண்மை அலுவலர்கள் சரண்யா, முருகேசன் எழிலரசன், தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.-