ADDED : ஆக 28, 2024 02:08 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடந்தது.
தொற்று உடைய மண் வாயிலாக, மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை, கால்கள் படுவதன் வாயிலாக, மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. இதை தடுக்க, தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கும் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் நடந்தது.
இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களின் வாயிலாக அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 30ம் தேதி வழங்கப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
