ADDED : ஏப் 05, 2024 10:57 PM
அ நிறம் | அளவு
போத்தனூர் : க.க.சாவடி அடுத்து மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட, புதுப்பதி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில், 'ஸ்வீப்' எனும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாடகர் நலீன் பிரபஞ்சம் மற்றும் குழுவினரின் வள்ளி கும்மி இசை நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன், மதுக்கரை தாசில்தார் சத்யன், மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் கருணாநிதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.
