/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கூட்டம்
/
கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கூட்டம்
ADDED : ஆக 06, 2024 05:53 AM
அன்னுார்: கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
கஞ்சப்பள்ளி ஊராட்சியில், 95.5 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாம் குளம் உள்ளது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் ஆறாவது நீரேற்று நிலையத்தை ஒட்டி இந்த குளம் உள்ளது. அத்திக்கடவு நீர் மற்றும் மழை நீரால் இந்தக் குளம் நிரம்பி வழிகிறது.
அன்னுார் பேரூராட்சியில் இருந்து கழிவுநீர் இந்த குளத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து கஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 95.5 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாம் குளத்தில், ஒன்பது ஏக்கர், 57 சென்ட் அன்னுார் பேரூராட்சிக்கு சொந்தமானது.
அதில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. அல்லப்பாளையம் மற்றும் கஞ்சப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த 1500 ஏக்கர் நிலங்கள் இந்த குளத்தில் உள்ள நீரால் பயன்பெற்றுள்ளன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுகிறது.
இந்நிலையில் கழிவு நீர் இந்த குளத்தில் கலந்தால், நிலத்தடி நீர் மாசுபடும். எனவே எருக்கலாம் குளத்தில் கழிவு நீர் கலக்காமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் கோவை கலெக்டர் அலுவலகம், அன்னுார் தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.