/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டுப்போட சிறப்பு அனுமதி அவசியம்
/
தேர்தலில் டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டுப்போட சிறப்பு அனுமதி அவசியம்
தேர்தலில் டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டுப்போட சிறப்பு அனுமதி அவசியம்
தேர்தலில் டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டுப்போட சிறப்பு அனுமதி அவசியம்
ADDED : ஏப் 06, 2024 11:53 PM
கோவை;மருத்துவ சேவையாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையாற்ற, ஓட்டுப்பதிவு நாளன்று, அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி, ஓட்டுகளை பதிவு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வரும் லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்குச் சென்று தபால் ஓட்டு பெறப்படுகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிப்பதில் சிரமம் இருப்பின், தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இன்றியமையா பணிகளில் ஒன்றான மருத்துவ சேவையில், மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்க சிரமப்படுகின்றனர்.
மருத்துவ சேவையில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர், ஓட்டளிக்க விரும்பினாலும், சூழல் காரணமாக, அவர்களால் செல்ல முடிவதில்லை.
அவர்களுக்கான உரிமையை மறுக்காமல், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் ஓட்டளிப்பதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.
ஏனெனில், கோவை மாவட்டத்தில் மட்டும் இரண்டு அருசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி கட்டுப்பாட்டில், 69 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும், 800 தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
இங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், ஓட்டளிக்கச் சென்று வர, குறிப்பிட்ட நேரம் மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்நேரத்துக்குள் அவர்களால் ஓட்டளித்து விட்டு வர வாய்ப்பில்லை.
அதனால், மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படாத வகையில், 'ஷிப்ட்' முறையில் மாற்றம் செய்து, அவர்கள் ஓட்டளிக்கவும், ஓட்டுச்சாவடிகளுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சீருடையில் வரும் பட்சத்தில் சிறப்பு அனுமதி வழங்கி, ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், எந்தவொரு பிரிவினரும் ஓட்டளிக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்; 100 சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியமாகும்.
கலெக்டர் கிராந்தி குமாரிடம் கேட்டதற்கு, ''டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ஓட்டளிக்க, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிப்பதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்படும்,'' என்றார்.
மருத்துவ சேவையில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர், ஓட்டளிக்க விரும்பினாலும், சூழல் காரணமாக, அவர்களால் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கான உரிமையை மறுக்காமல், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் ஓட்டளிப்பதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.

