ADDED : மே 03, 2024 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வெயில் குறைந்து மழை பொழிய வேண்டி, கோவையில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் அடைந்து, மழை பெய்ய வேண்டும் என்பதற்காக, த.மு.மு.க., இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில், சாரமேட்டில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அனைவருக்கும், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
த.மு.மு.க., மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். ரெக்ஸ் ரபீக் முன்னிலை வகித்தார்.