/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது
/
கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது
கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது
கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது
ADDED : பிப் 24, 2025 09:35 PM
- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உள்ள கோவில்களில் நாளை மகா சிவராத்திரி நடக்கிறது. பொள்ளாச்சி சிங்காநல்லுார் பாலாற்றங்கரையில் சித்தாண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், நாளை (26ம் தேதி) காலை 10:00 மணிக்கு தெய்வகுலம் காளியம்மன் கோவில் தீர்த்தத்துக்கு செல்லுதல், மாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு தீர்த்தம் வந்தடைதல், மாலை, 6:00 மணிக்கு சிக்காட்டம், 9:00 மணிக்கு முதற்கால அபிேஷகம், 10:00 மணிக்கு ஒயில் கும்மி நிகழ்ச்சி, நள்ளிரவு 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம் இடம்பெறுகிறது.
அதிகாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம் 4:00 மணிக்கு ஆன்மிக இசைக்கலை விழா, 5:30 மணிக்கு நான்காம் கால அபிேஷகம் 6:30 மணிக்கு பள்ளய பூஜை 8:00 மணி முதல் அன்னதானம், 10:30 மணிக்கு மகா அபிேஷகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.
* பொள்ளாச்சி, நல்லூர், மாகாளியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று (25ம் தேதி), காலை, 9:00 மணிக்கு, தெய்வகுலம் காளியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு, சக்தி கலச தீர்த்தம், சக்தி பூவோடு முத்தரித்தல், பக்தர்கள் பூவோடு எடுத்து வரும் நிகழ்வு மற்றும் வாண வேடிக்கை போன்றவை நடக்கிறது.
நாளை (26ம் தேதி), காலை 6:00 மணிக்கு, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், காலை, 7:00 மணிக்கு, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருதல், மகாதீப ஆராதனை நடைபெறுகிறது. மதியம், 3:00 மணிக்கு, விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.
மாலை, 6:30 மணிக்கு, மகா சிவராத்திரி பூஜை, இரவு, 7:30 மணிக்கு, நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
வரும் 28ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, அம்மன் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா அம்மன் திருவீதி உலாவும், மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
உடுமலை
உடுமலை ருத்தரப்ப நகர் சித்தி விநாயகர் கோவிலில், விசாலாட்சி உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் சுவாமிக்கு, மகா சிவராத்திரி விழா நாளை (26ம்தேதி) நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை, புண்யாகவாசனம், மகாலட்சுமி, நவக்கிரக ேஹாமம், சித்தி விநாயகர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு முதற்கால யாகம், மாலை, 6:00 மணிக்கு முதல் கால அபிேஷக அலங்காரம், இரவு, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகம், 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷக அலங்காரம் இடம்பெறுகிறது.
இரவு, 12:30 மணிக்கு மூன்றாம் கால யாகம், தொடர்ந்து மூன்றாம் கால அபிேஷக அலங்காரம், அதிகாலை 3:30 மணிக்கு நான்காம் கால யாகம், நான்காம் கால அபிேஷக அலங்காரமும் நடக்கிறது.
நெகமம்
நெகமம், நேரிள மங்கை உடனமர் நித்தீசுவரர் கோவிலில், இவ்விழாவையொட்டி, நாளை மாலை, 3:30 மணிக்கு, ரிக் வேத யாகம், விநாயகர் வழிபாடு, விசேஷ பூஜைகள், ஹோமம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, முதற்கால விசேஷ அபிஷேகம் மகா தீபாராதனை நடக்கிறது.
இரவு, 10:30 மணிக்கு, இரண்டாம் கால விசேஷ அபிஷேகம் மகா தீபாராதனையும், நள்ளிரவு 1:15 மணிக்கு, மூன்றாம் கால விசேஷ அபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
வரும் 27ம் தேதி, அதிகாலை, 3:00 மணிக்கு, அதர்வண வேத யாகம், ருத்ர ஹோமமும், அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

