/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்
/
கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்
ADDED : டிச 09, 2024 06:46 AM
கோவை: கும்பமேளாவை முன்னிட்டு, கோவை - வாரணாசி, அயோத்தி ஆன்மிகச் சுற்றுலா சிறப்பு ரயிலை ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.
மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜன., 13 முதல், பிப்., 28ம் தேதி வரை, உத்திரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் எனும் இடத்தில் நடக்க உள்ளது.
தமிழகத்தில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.
கோவையிலிருந்து பிப்., 18ம் தேதி புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, வழியாக இயக்கப்படுகிறது.
புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி கோவில், காசி விசாலாட்சி ஆலயம், சங்கட்மோட்சன் ஆலயம், அனுமன் ஆலயம், துளசிமானஸ் ஆலயம், கங்கா ஆர்த்தி, பிரயாக்ராஜ்(அலகாபாத்) திரிவேணி சங்கமம், அயோத்தி புதிய குழந்தை ராமர் ஆலயம், உள்ளிட்ட பல்வேறு இடங்களை காணமுடியும். ரயில் கட்டணம், ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, சைவ உணவு, ஜி.எஸ்.டி., ஆகியவை அடங்கும். எட்டு நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு, ஏ.சி., இல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க, 26 ஆயிரத்து 320 ரூபாய் கட்டணம்.
மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டியில் பயணிக்க, 41 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி., சலுகையை பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணில், www.irctctourism.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.