/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை சிறப்பு பயிற்சி
/
போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை சிறப்பு பயிற்சி
ADDED : மே 10, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி, மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, விபத்தில் சிக்கி காயம் அடைந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து, 181 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, விபத்தில் சிக்குவோரை மீட்கும் போலீசார் உடனடியாக அவர்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி விடலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பயிற்சியின் போது, ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.