/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
/
அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
ADDED : மே 10, 2024 11:07 PM

பொள்ளாச்சி;அட்சய திருதியை முன்னிட்டு, பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன், 108 கண் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஐந்து ரூபாய் நாணயம் அடங்கிய காசு மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.