ADDED : மார் 11, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லுாரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது.
கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய துணை தலைவர் இறையன்பன் குத்துாஸ், எம்.பி.,க்கள். ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோவையிலுள்ள 168 கல்லுாரிகளிலிருந்து, 500 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் கோவையிலிருந்து மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.