/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவா பாரதி சார்பில் பேச்சு போட்டி
/
சேவா பாரதி சார்பில் பேச்சு போட்டி
ADDED : ஆக 17, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்:சேவா பாரதி சார்பில் நடந்த பேச்சு போட்டியில், மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூலூர் ஒன்றிய சேவா பாரதி சார்பில், பேச்சு போட்டி சோமனூரில் நடந்தது. இதில், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என, 58 பேர் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் பேசி, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நடுவர்களாக முன்னாள் ஆசிரியர் விஸ்வநாதன், பட்டிமன்ற பேச்சாளர் மோகன்குமார் பங்கேற்றனர்.
சேவா பாரதி மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பொன்னுசாமி, பிரபாகரன் ஆகியோர் பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

