தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அதிவேகம் உயிரிழப்பை ஏற்படுத்தும்'

'அதிவேகம் உயிரிழப்பை ஏற்படுத்தும்'

'அதிவேகம் உயிரிழப்பை ஏற்படுத்தும்'


ADDED : ஜூலை 29, 2024 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருமத்தம்பட்டி;'அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது உயிரிழப்பை ஏற்படுத்தும்,' என, சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., அலுவலகம், போக்குவரத்து போலீஸ் சார்பில், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நடந்தது.

கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் பேசியதாவது: மக்களின் தேவைக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளன. அதனால், ஒவ்வொருவரும் வாகனங்களை விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகாத சிறுவர், சிறுமியரை வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது. அதேபோல், லைசென்ஸ் இல்லாமலும், மது அருந்தி விட்டும், செல்போன் பேசியபடியும் வாகனங்களை ஓட்டக்கூடாது.

ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றுவது, அதிக வேகத்தில் இயக்குவது உயிரிழப்பை ஏற்படுத்தும். நம்மை நம்பி குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்ற எண்ணத்தில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, எஸ்.ஐ., செந்தில்குமார், போக்குவரத்து எஸ்.ஐ., மகேஷ் உள்ளிட்டோர் பேசினர். ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us