/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு தான் உற்சாகத்தை அளிக்கும்! ஜெயித்தவர் சொன்னா எல்லோரும் கேட்கணும்

ADDED : பிப் 21, 2025 10:54 PM

''இளைஞர்கள், சிறுவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட வேண்டும். விளையாட்டு தான் உற்சாகத்தை அளிக்கும். அதுவே உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்,'' என்கிறார் போலீஸ் கோவிந்தராஜ்.
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றுகிறார் கோவிந்தராஜ்,46. இவர், கடந்த, 23 ஆண்டுகளாக போலீசாக பணியாற்றிக்கொண்டே விளையாட்டிலும் சாதித்து வருகிறார்.
பள்ளி நாட்களிலேயே விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். போலீஸ் சார்பில் நடக்கும் போட்டிகள் மட்டுமல்ல, முதல்வர் கோப்பை உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று மெடல்களை அள்ளி குவித்துள்ளார்.
விளையாட்டின் மீதான காதலால், தொடர்ந்து உற்சாகமாக மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடிவருகிறார். மே மாதம் இலங்கையில் நடக்கும் 'ஆசியன் மீட்' போட்டியில், பங்கேற்க தயாராகி வருகிறார்.
கோவிந்தராஜ், தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில் இருந்து...
பள்ளி நாட்களில், 100, 200 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வெற்றேன். அரசுப்பள்ளியில் படித்தேன்; பி.எஸ்சி., தாவரவியல் படித்தேன்.
விளையாட்டில் சாதித்ததால், கல்லுாரியில் இடம் கிடைத்தது; போலீஸ் துறையிலும் பணி கிடைத்தது. விளையாட்டினால் எனது வாழ்க்கையே உற்சாகமாக மாறியது. அதனால் தான், இன்னும் விளையாட்டில் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது.
மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்த போட்டிகள், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில், 100, 200, 400 மீட்டர்கள் ஓட்ட போட்டிகளில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான தருணம்.
என்ன தான் வெற்றி பெற்றாலும் பயிற்சியை மட்டும் விடமாட்டேன். மேற்கு மண்டல காவலர் தடகள பயிற்சியில், பயிற்சி பெறுகிறேன். நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் கால்பந்து விளையாடுவேன். காலை நேரம் சைக்கிளில் செல்வேன்.
எப்போதும் உற்சாகமாக இருக்க விளையாட்டு தான் காரணம். விளையாட்டு ஆர்வத்துக்கு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் போலீசார், உயர் அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் உற்சாகப்படுத்துகின்றனர். இதனால் தான் சாதிக்க முடிந்தது.
வாழ்நாள் முழுக்க விளையாடிக்கிட்டே இருக்கணும். இயற்கையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். விளையாட்டு என்னை ஒழுக்கப்படுத்தி, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தியது. உடல் ஆரோக்கியம் காக்க உதவியாக உள்ளது.
இப்போதைய இளைஞர்கள், சிறுவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட வேண்டும். விளையாட்டு தான் உற்சாகத்தை அளிக்கும். அதுவே உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இவ்வாறு, கூறினார்.