/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா பிப் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
சுகுணா பிப் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : ஆக 22, 2024 12:45 AM

கோவை : சுகுணா பிப் பள்ளியின், 18ம் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
கர்னல் திருவேங்கடசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விளையாட்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவியர் அக்வா, இக்னஸ், டெர்ரா, வென்ட்ஸ் என அணிகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களின் நாட்டியோபிக்ஸ், யோகா, ஆர்டிஸ்டிக் யோகா, களரி அடிமுறை, மல்லர்கம்பம், கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. சுகுணா பிப் பள்ளி தலைவர் லட்சுமி நாராயணசாமி, முதல்வர் பூவண்ணன், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.