/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா 'அட்மிஷன்'
/
ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா 'அட்மிஷன்'
ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா 'அட்மிஷன்'
ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா 'அட்மிஷன்'
ADDED : மே 13, 2024 12:29 AM
கோவை:பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு பள்ளியில், விளையாட்டு மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில், 'அட்மிஷன்' வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டில் திறமையான மாணவ - மாணவியருக்கு சலுகை கட்டணம், மற்றும் இலவச கல்வி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இந்தாண்டு ஸ்ரீகோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் திறமையான வீரர் - வீராங்கனையினருக்கு, பள்ளி கல்வியில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மற்றும் அனைத்து விதமான தனிநபர் விளையாட்டுகளுக்கும், சேர்க்கை வழங்கப்படுகிறது.
இதில் பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட, மாநில போட்டிகள் மற்றும் ஓபன் மாநில போட்டிகளில், பங்கேற்ற மாணவ - மாணவியர் கலந்து கொள்ளலாம்.
மே 31ம் தேதி வரை நடைபெறும் தேர்வில், மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, அட்மிஷன் பெறலாம்.