ADDED : ஆக 23, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், இத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க கோரியும், தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ. எஸ்.) சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் போத்தனூர் ரயில்வே மருத்துவமனை முன் நடந்தது.
கிளை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெபசிங் பிரசாத், உதவி பொது செயலாளர் (சென்னை) மணிலால் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

