நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவில் நாளை காலை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு அம்மனின் ஒன்பது அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், நவதுர்க்கை வடிவில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு தீவினைகளை அழிக்க, அம்மன் பரிவேட்டைக்கு கிளம்பும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வானில் வர்ணஜாலம் காட்டும் சிறப்பான நிகழ்ச்சியாக, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
தேர்த்திருவிழாவில், வாணவேடிக்கை நிகழ்ச்சிமுக்கிய அம்சமாக இடம் பெறுகிறது.

