/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி 12 மாணவர்கள் சி.ஏ.,தேர்வில் தேர்ச்சி

ADDED : ஜூலை 12, 2024 11:12 PM

கோவை:இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட, சி.ஏ., இன்டர்மீடியேட் தேர்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்டர்மீடியேட் தேர்வு கடந்த மே மாதம் பல்வேறு கட்டங்களாக நடந்தது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதில், ராமகிருஷ்ணா கல்லுாரியை சேர்ந்த,பி.காம்., மாணவர்கள் சுகுமார், கவுதம், சாயூஜ், விபின், பகத்சிங், முத்துசுதர்சன், சுகன், பிரவீன், பரத்குமார், ஜனார்த்தனசக்தி, பி.காம்., சி.எம்.ஏ., துறை மாணவி ஸ்ரீநிதி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார், துறைத்தலைவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.