/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஆர்.கே., பிரசாத் நினைவு கிரிக்கெட்
/
எஸ்.ஆர்.கே., பிரசாத் நினைவு கிரிக்கெட்
ADDED : மார் 21, 2024 11:57 AM
கோவை;சி.ஐ.டி., கல்லுாரி சார்பில் நடக்கும் இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் அசத்தலாக விளையாடினர்.
சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், மூன்றாம் ஆண்டு 'டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒரு பகுதியாக, கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி கே.ஐ.டி., அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த சி.ஐ.டி., அணி, நரேன் கணபதி (45) உதவியோடு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. கே.ஐ.டி,. அணியின் துவக்க வீரர் நிக்சன் (42) நிதானமாக விளையாட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், கே.ஐ.டி,. அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சி.ஐ.டி., அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

