/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித லுாக்கா தேவாலய தேர்த்திருவிழா கோலாகலம்
/
புனித லுாக்கா தேவாலய தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : பிப் 24, 2025 09:46 PM

வால்பாறை, ;வால்பாறை புனித லுாக்கா தேவாலய தேர்த்திருவிழாவில், நுற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை, கோ-ஆப்ரெடிவ் காலனியில் உள்ள புனித லுாக்கா தேவாலய தேர்த்திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு திருப்பலியும், மாலை, 4:30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது.
வாழைத்தோட்டம் பந்தலில் நடந்த முடீஸ் ஆலய பங்குதந்தை பெனிட்டோ, அய்யர்பாடி ஆலயபங்குதந்தை ஜெரால்டின் ஆகியோர் தலைமையில், சிறப்பு கூட்டுப்பாடற்திருப்பலி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் புனித செபாஸ்தியார் மற்றும் அன்னை ஆரோக்கிய மாதாவின் திருவுருவ சிலைகளை வைத்து, வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக சென்று, இரவு ஆலயத்தை சென்றடைந்தனர்.
தேர்த்திருவிழாவில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழாவில், நேற்று காலை, 7:00 மணிக்கு திருப்பலியும், மாலை, 4:30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை, ஆலயபங்கு தந்தை ஜிஜோதாமஸ் மலப்பிரவினால், ஆலய நிர்வாகிகள் லாலுமூலன், ஷாஜூதெக்கினியத்து, பென்னி கலபரம்பத், போனி தெக்கினியேடத்து ஆகியோர் செய்திருந்தனர்.

