தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.டி.ஏ.டி., கோடை பயிற்சி முகாம் நிறைவு

எஸ்.டி.ஏ.டி., கோடை பயிற்சி முகாம் நிறைவு

எஸ்.டி.ஏ.டி., கோடை பயிற்சி முகாம் நிறைவு


ADDED : மே 15, 2024 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பயிற்சி முகாம் நேரு ஸ்டேடியத்தில் ஏப்., 29ம் தேதி முதல் நடந்தது.

இதில் கூடைப்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு எஸ்.டி.ஏ.டி., பயிற்சியாளர்கள் மூலம் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா, நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது.

கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா மற்றும் பயற்சியாளர்கள் பங்கேற்று, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us