/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம் வருவாய்த்துறை வேண்டுகோள்
/
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம் வருவாய்த்துறை வேண்டுகோள்
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம் வருவாய்த்துறை வேண்டுகோள்
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம் வருவாய்த்துறை வேண்டுகோள்
ADDED : ஜூன் 25, 2024 12:26 AM
கோவை;கோவை ஒண்டிப்புதுார் திறந்த வெளி சிறை அமைந்துள்ள இடத்தில், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து, நில வகைப்பாட்டை மாற்றித்தர கோரி மாநகராட்சிக்கு, வருவாய்த்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை தெற்கு தாசில்தார் சரவணகுமார், கோவை கிழக்கு மண்டல உதவி கமிஷனருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
சிங்காநல்லுார் கிராமம், சர்வே எண், 777 மற்றும் 778ல் முறையே 10.47 ஏக்கர் மற்றும் 10.25 ஏக்கர் பரப்பு என்று மொத்தம் 20.72 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி சிறை என்ற வகைப்பாட்டில் நிலம் உள்ளது. இந்த இடத்தை, சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு, நிலமாறுதல் செய்ய வேண்டும்.
அதற்காக, சிங்காநல்லுார் கிராமம் புல எண் 777, 778 அரசு புறம்போக்கு திறந்தவெளி சிறைச்சாலை என்ற வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.