/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்
/
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 07:08 AM

கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர், கோவையில் நாளை (12ம் தேதி) தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதி பொறுப்பாளரான, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவையில் முகாமிட்டு, தொழில்துறை நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
மா.கம்யூ., தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் சுபேர்கான் உள்ளிட்டோர், பிரசாரம் செய்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர், நாளை (12ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, கோவை எல் அண்டு டி பைபாஸில் செட்டிபாளையம் அருகே உள்ள மைதானத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.
12 சட்டசபை தொகுதிகளில் இருந்து, ஒரு லட்சம் பேரை திரட்டி வர வேண்டுமென, கட்சியினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
மேடை அமைக்கும் பணியை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேற்று பார்வையிட்டார். மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளை விளக்கினர்.

