/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி
/
கோவையில் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி
ADDED : செப் 05, 2024 11:47 PM

கோவை:தபால் தலை சேகரிப்பு என்பது, ஒரு பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், அதில் அச்சடிக்கப்பட்டுள்ள தலைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சம் ஆகியவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, நவ., 12 மற்றும் 13ம் தேதிகளில், கோவை மாவட்ட அளவில், அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கண்காட்சியின் லோலோ மற்றும் கையேடு ஆகியவற்றை, மேற்கு மண்டல தபால் துறை இயக்குனர் அகில் நாயர் வெளியிட, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் பெற்றுக் கொண்டார். போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
விபரங்களுக்கு: 0422 - 2382930.