ADDED : ஏப் 02, 2024 10:24 PM
அ நிறம் | அளவு
- நமது நிருபர் -
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணி, மாவட்டத்தின் இரு மையங்களில் துவங்கியது. வரும், 10ம் தேதி வரை பணி நடக்கிறது.
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள இன்பான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளியிலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது.
முதன்மை கண்காணிப்பாளர், முதன்மை கூர்நோக்கு அலுவலர் உள்ளிட்ட, 194 பேர் தங்கள் பணிகளை துவங்கினர்.
நேற்று முதல் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் அலுவலர்கள், தங்கள் பணிகளை துவக்கினர். மொழித்தாள்களை தொடர்ந்து, முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
