/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து போட்டி; பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
/
மாநில கூடைப்பந்து போட்டி; பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
மாநில கூடைப்பந்து போட்டி; பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
மாநில கூடைப்பந்து போட்டி; பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 12:11 AM

கோவை : மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவங்கியது.
பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 'பி.எஸ்.ஜி., கோப்பைக்கான' 8ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி., உள்விளையாட்டு அரங்கில், கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
போட்டியை, பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் பிரகாசன், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 27 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி, முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே 'ரவுண்ட் ராபின்' முறைப்படி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
முதல் சுற்றுப்போட்டி முடிவுகள்:
சிக்சர்ஸ் அகாடமி அணி 75 - 35 என்ற புள்ளிக்கணக்கில் விங்ஸ் அகாடமியையும்; ராஜலட்சுமி மில்ஸ் அணி 95 - 88 என்ற புள்ளிக்கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழக அணியையும்; கே.பி.ஆர்., அகாடமி அணி 70 - 53 என்ற புள்ளிக்கணக்கில் நிட்சிட்டி அணியையும்; கோவை டெரியர்ஸ் அணி 78 - 36 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி அணியையும்; யுனைடெட் கிளப் 74 -42 என்ற புள்ளிக்கணக்கில் சண்டே ஸ்டார்ஸ் அகாடமியையும்; பாரத் கிளப் 93 - 56 என்ற புள்ளிக்கணக்கில் பிரண்ட்ஸ் கிளப்பையும்; டெக்சிட்டி 89 - 72 என்ற புள்ளிக்கணக்கில் ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும்; கே.சி.டி., 78 - 23 என்ற புள்ளிக்கணக்கில் சார்க்ஸ் அணியையும்; ஒய்.எம்.சி.ஏ., 64 - 52 என்ற புள்ளிக்கணக்கில் பேஷன் அகாடமியையும் வீழ்த்தின.