/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில செஸ் போட்டி; கோவை அசத்தல்
/
மாநில செஸ் போட்டி; கோவை அசத்தல்
ADDED : மே 31, 2024 01:43 AM

கோவை;இந்துஸ்தான் கல்லுாரியில் நடக்கும் மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டியின், ஏழு சுற்றுகளின் முடிவில் கோவை வீரர் ஆகாஷ் 6.5 புள்ளிகள் பெற்று அசத்தினார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 74வது தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
இப்போட்டியில், 35 மாவட்டங்களில் இருந்து, 276 சர்வதேச தர போட்டியாளர்கள் உட்பட 504 பேர் பங்கேற்றுள்ளனர். இதன் ஏழு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், கோவை ஆகாஷ் மற்றும் சென்னையை சேர்ந்த ஹிரன் ஆகியோர், 6.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளனர்.
போட்டியாளர்கள் மத்தியில் பேசிய கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, மாநில அளவிலான போட்டிகளின் முக்கியத்துவம், மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் நன்மைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதன் இறுதிச்சுற்றுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.