/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களின் மாநில மாநாடு
/
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களின் மாநில மாநாடு
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களின் மாநில மாநாடு
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களின் மாநில மாநாடு
ADDED : ஜூன் 24, 2024 12:31 AM
கோவை:அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்களின், மாநில மாநாடு நடைபெற்றது.
கோவை, அன்னுார் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்கள் பேரவையின், 2-வது மாநில மாநாடு நடைபெற்றது.
பேரவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜாராம் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் சந்திரசேகரன் வரவு செலவு கணக்கை வாசித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அரசே பொறுப்பெடுத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும், கடந்த நவ., 22ம் தேதி முதல் ஓய்வு பெற்ற மற்றும் இறந்துபோன தொழிலாளர்களுக்கு, ஓய்வுகாலப் பணப்பலன்களை வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து, 2015ம் ஆண்டு நவ., முதல் அகவிலைப்படி உயர்வை, நிலுவையுடன் அமல்படுத்த வேண்டும்.
ஊதிய ஒப்பந்தம், 7வது ஊதியக்குழு பரிந்துரையை, ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்புகளில் வாரிசுகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தணிக்கையாளர்கள் ஊதிய வித்தியாசத்தை அரசாணை, 61ல் குறிப்பிட்டவாறு வழங்க வேண்டும். சேம நல நிதி பணத்தை, நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.